திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (13:16 IST)

இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மரணம்: டிடிவி தினகரன் இரங்கல்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
  
அண்மையில் இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்திய சந்திராயன்-3 விண்கலம் உட்பட கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட்கள் ஏவுதலின் போது ஒலித்த விஞ்ஞானி வளர்மதியின் குரலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
 
விண்வெளித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி இன்று பெருமளவு உயர காரணமான பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான வளர்மதியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
 
 
Edited by Mahendran