திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:35 IST)

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை: இஸ்ரோ விஞ்ஞானி தகவல்..!

full moon day
நிலவுக்கு மனிதனை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம் சமீபத்தில் சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கி பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதில் அளித்த இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
மேலும் தோல்வியில் இருந்து கற்ற பாடமே சந்திராயன் 3 வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும்  அவர் தெரிவித்தார்
 
Edited by Siva