1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (08:46 IST)

இடைத்தேர்தலுக்கு பதில் சொல்ல முடியாது! பிரதமர் தேர்தல்ல கேளுங்க! – அண்ணாமலை பதில்!

Annamalai
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இடைத்தேர்தலுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை என கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியிலிருந்து வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இடைத்தேர்தல் குறித்து அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது பிரதமருக்கான தேர்தல் இல்லை. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியை மக்கள் தீர்மானிப்பார்கள். அப்போது நாங்கள் பதில் சொல்வோம். இடைத்தேர்தலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளார்.

இதனால் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை என்றும், அதிமுகவிற்கு பாஜகவின் ஆதரவு மட்டும் அளிக்கப்பட உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.