திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (11:57 IST)

அதிமுகவில் இருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது: வைகைச்செல்வன்

Vaigai Selvan
திமுக ஒரு ஓடாத வண்டி என்றும் அதிமுகவிலிருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசி உள்ளார். 
 
திமுக என்ற ஓடாத வண்டியை அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற 8 முன்னாள் அமைச்சர்கள் தான் தற்போது ஓடவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசி உள்ளார். 
 
மேலும் ஓபிஎஸ் ஒரு காலாவதியான மாத்திரை என்றும் காலாவதி மாத்திரை எதற்கும் உதவாதது போல ஓபிஎஸ் எதற்கும் உதவாதவர் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே கடந்த கடந்த சில நாட்களுக்கு முன் திராவிட மாடல்  என்ற பெயரில் குடும்ப அரசியல் நடத்திவரும் திமுக அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று வைகைசெல்வன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran