1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (11:35 IST)

ஓபிஎஸ்-ஐ தவிர்த்துவிட்ட அதிமுகவால் வெற்றி பெற முடியாது: தனியரசு

thaniyarasu
ஓபிஎஸ்ஐ தவிர்த்து விட்டு திமுகவை எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவால் வெற்றி பெற முடியாது கொங்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார். 
 
ஓபிஎஸ் அவர்களை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெற செய்ய முடியாது என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஓ பன்னீர்செல்வம் அவர்களை அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம் என்றும் அவர் கூறினார். 
 
இதனை அடுத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாளித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran