1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ttv dinakaran factions post election giveaway

நன்றி தெரிவிக்கும்போதும் பணப்பட்டுவாடா? பணமழையில் ஆர்.கே.நகர் மக்கள்

டிடிவி தினகரன் | சென்னை | இடைத்தேர்தல் | ஆர் கே நகர் | அதிமுக | TTV Dinakaran | RK Nagar
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு திராவிட கட்சிகளை தோற்கடித்த தினகரனின் வெற்றிக்கு பணமே பிரதானம் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தனக்கு வாக்களித்து தன்னை எம்.எல்.ஏஆக மாற்றிய ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு இன்று நேரில் நன்றி தெரிவிக்கின்றார் தினகரன்

இந்த நிலையில் ஏற்கனவே ரூ.20 டோக்கன் கொடுக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு சத்தமில்லாமல் நேற்று இரவு முதல் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மீண்டும் ஆர்.கே.நகர் மக்கள் பணமழையில் நனைந்து வருவதாக கூறப்படுகிறது.

சொன்ன சொல்லை காப்பாற்றும் வகையில் டோக்கனுக்கு பணம் கொடுத்தால்தான் அடுத்த தேர்தலில் இந்த டோக்கன் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்பதற்காக இந்த பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ரயில் பயணிகளுக்கு பிரத்யேக டெபிட் கார்டு: புதிய அறிமுகம்