1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (19:44 IST)

தொகுதிப் பங்கீடு; அதிமுக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தை ரத்து !

விஜயகாந்த் தலைமையிலான அக்கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில்  இன்று மீண்டும் அதிமுகவுடன் அக்கட்சி தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் உடல்நலக்குறைவுடன் இருந்தாலும் தன் கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். எனவே, அக்கட்சிக்கு தேவையான தொகுதிகளை அதிமுக ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனமே பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் பொருந்திப்போகாத நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலைபோலவே இருகட்சிகளும் அதிமுககூட்டணியில் உள்ளது.

அதேசமயம் தேமுதிகவுக்கு கௌரவமான தொகுதிகள் ஒதுக்காத பட்சத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அக்கட்சிக்கு பெரும் கவுரவ குறைச்சல் உண்டாகும் என் நினைப்பதுபோல் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது.

அதிமுக -தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கீடு குறித்து சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாலை 6:30 மணிக்கு அதிமுகவினருடன் தேமுதிகவினர் நடந்த இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.