புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (14:06 IST)

”திமுக வெற்றி பெற்றது ஒரு விபத்து”.. விளாசிய தினகரன்

மக்களவையில் திமுக வெற்றி பெற்றது ஒரு விபத்து என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றது. அதிமுக-பாஜக கூட்டணி கடும் தோல்வியை சந்தித்தது. எனினும் விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கடும் தோல்வியை சந்தித்தது.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இடைத்தேர்தலில் அமமுக கட்சி போடியிடாத நிலையில் தற்போது டிடிவி தினகரன் உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், ”திமுக வெற்றி பெற்றது ஒரு விபத்து, திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா? என்பது தெரிந்துவிடும் என கூறியுள்ளார்.