தொடர்புடைய செய்திகள்
- எடப்பாடியார் ஏரியாவுக்குள் கால் வைக்கும் சசிக்கலா! – அதிமுகவில் பரபரப்பு!
- திமுக அரசினை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
- அதிமுக கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்.
- மானமுள்ளவராக இருந்தால் அண்ணாமலை இதை செய்யனும்.. ஆர்எஸ்.பாரதி!
- திமுக ஆட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இதுதான் திமுகவின் திராவிட மாடலா? சீண்டும் டிடிவி!
பள்ளிக் குழந்தைகளை கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளாம்பட்டி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், சுமார் 50 கும் மேர்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பள்ளிக் குழந்தைகளை கழிவறையைச் சுத்தம் செய்யக் கூறி ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளிக்கல்வித் தலைமையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் பால் மணம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்கூடக் கழிவறையை சுத்தம் செய்வதாக வெளியாகியிருக்கும் காணொளி மனம் பதைக்கச் செய்கிறது.
புத்தங்களை ஏந்த வேண்டிய கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது நியாயமா? இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடலா? இனி, இப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திடக்கூடாது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு வந்து படிக்கும் இடமாக அரசு பள்ளிக்கூடங்கள் மாற்றப்பட வேண்டும்.
