திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (16:09 IST)

மானமுள்ளவராக இருந்தால் அண்ணாமலை இதை செய்யனும்.. ஆர்எஸ்.பாரதி!

முதல்வர் குறித்து அண்ணமலை பேசியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி இது குறித்து கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்று இருக்கும் நிலையில் அவர் 5000 கோடி பணத்தை எடுத்துச் சென்று விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி இது குறித்து கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, அண்ணாமலை தொடர்ந்து பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்டு தன்னுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்ததிலிருந்து அடுக்கடுக்காக பொய்களைக் கூறிக் கொண்டிருக்கிறார். 
 
முதல்வர் குறித்து பேசியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்காவிடில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டு 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும்.
 
மானமுள்ளவராக இருந்தால் அனுப்பிய நோட்டீஸ்க்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும். திமுக சட்டப் போரைத் தொடங்கினால் அண்ணாமலையால் எதிர்கொள்ள முடியாது என தெரிவித்தார்.