கிளை ஆட்சி என்ற ஆணவமா? யாரை தாக்குகிறார் தினகரன்?
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை தினகரன் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளது. சமீத்தில் சசிகலாவை சென்று சந்தித்து வந்தார் தினகரன்.
இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருவதால், இதற்கு பதில் அளித்தார் தினகரன். அவர் கூறியது பின்வருமாறு, சசிகலாவை நேரில் சந்தித்து நான் பேசினேன். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று வெளியான தகவல் வெறும் வதந்திதான்.
தமிழகத்தில் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் விதமாக சோபியாவின் கைது சம்பவம் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் அணுகுமுறை மிகவும் தவறானது. மத்தியில் எங்கள் ஆட்சி மற்றும் மாநிலத்தில் எங்கள் கிளை ஆட்சி என்ற ஆணவ போக்கு தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சிதான் அமையும். தேர்தல் போதுதான் கூட்டணி குறுத்து முடிவு எடுக்கப்படும். வரும் பாரளுமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி டெபாசிட்கூட வாங்காது என தெரிவித்துள்ளார்.