வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 செப்டம்பர் 2018 (13:52 IST)

தமிழகத்தை போல நாமும் ஆள வேண்டும்: தெலுங்கானா முதல்வர்

தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

 
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்  பொதுக் கூட்டத்தில் பேசிய  சந்திரசேகர ராவ் கூறியதாவது:-
 
தமிழகத்தை போல்  நாமும் ஆட்சி செய்ய வேண்டும் . டெல்லியில் இருந்து யாரையோ தேர்ந்து எடுப்பதற்கு பதில்  தமிழ் மக்களைப் போல் பிராந்தியக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு முடிவெடுக்க ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு  ஓட வேண்டும். எங்கள் தலைவர்கள் தெலுங்கானாவில் உள்ளனர் என கூறினார்.