1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (15:58 IST)

போக்குவரத்துறை அமைச்சரின் துணையோடு தொடரும் மணல் கொள்ளை அரசியல்: பாமக எச்சரிக்கை

மணல் கொள்ளையை நிறுத்தாவிடில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமனி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கரூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



காவிரில் தண்ணீர் கரைபுரண்டு ஒடியும் கூட கடைமடை பகுதிகளுக்கு விவசாயத்திற்க்கும் குடி தண்ணீருக்கும் கிடைக்கவில்லை. அதற்க்கு பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித  நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கரூர் தபால் தலை தலைமை அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் , கண்டன கோஷங்களை எழுப்பினர் பின் செய்தியாளர்களிடம் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன் கூறும்போது தற்போது ஆளும் கட்சியினர் மணலை வைத்து அரசியில் செய்து கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டியவர்

மேலும் ஆளும் கட்சியில் ஆட்களை சேர்ப்பதற்க்கு தங்களுடைய பகுதியில் தாரளமாக ஆளும் கட்சியில் உறுபினராகிக்கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபடுங்கல் என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வண்மையாம கண்டிக்கதக்கது என்றவர் மேலும் கரூரில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முழுக்க முழுக்க முக்கிய காரணமே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தான் மணல் கொள்ளை தடுப்பப்பட வேண்டும் நிர் நிலைகளை பாதுகாக்கப்பட வேண்டும் ,

விவசாயம் பாதுக்காக்கப்பட வேண்டும்  அதற்காக நெரூர் – வாங்கல் வழியாக செல்லும் ராஜவாய்க்காளில் தடுப்பனை கட்ட வேண்டும் என கோரிக்கைவிடுதவர் மேலும் அவ்வாறு நடைபெறாவிடில் பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமனிராமதாஸ் தலைமையில் மணல் கொள்ளைக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி மாமெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கண்ணன் , மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கிமுருகேசன், உழவர் பேரியக்க செயலாளர் ஞானசேகரன் , மற்றும் செந்தில் , வாங்கல்சதீஸ் , முத்து , பழனிச்சாமி , வழக்குறிஞர்செலவராஜ் , தாந்தோன்றிமைலைராஜா , சங்கர் , அப்துல்லா , தினேஷ் ,  உள்ளிட்ட மாவட்ட , நகர மற்றும் கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 
பேட்டி - பி.எம்.கே பாஸ்கரன்  - மாநில துணை பொதுச்செயலாளர் கரூர் மாவட்டம்