புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:21 IST)

காவிரி விவகாரம்; முதலமைச்சர், துணை முதலமைச்சர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பு

காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறித்தி அதிமுக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என பலர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.