1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran about State Election commission

கிடைச்ச வரைக்கும் லாபம்... தினகரனின் அசால்ட் போக்கு

டிடிவி தினகரன்
கட்சியாக பதிவாகியும் கூட அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
 
முன்னதாக அமமுக கட்சியை பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.  
 
இந்நிலையில் தற்போது அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் அமமுக போட்டியிட உள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அமமுக போட்டியிடும். ஒரே சின்னத்தை ஒதுக்க கோரி நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார் என பேசினார்.  
 
ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக அமமுக பொருளாளர் வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். இதனைத்தொடந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது... 
 
கட்சியாக பதிவாகியும் கூட அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது.  ஆளுங்கட்சி இன்னல்கள் தந்தும் அமமுகவை கட்சியாக பதிவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். அப்படியென்றால் கிடைத்த வரைக்கும் போதும் என தினகரன் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
குரூப் 1 தேர்வு நேர்காணலில் முறைகேடு – பேனாவுக்குப் பதில் பென்சில் ஏன் ?