திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (14:28 IST)

எங்கிருந்தாலும் வாழ்க... செந்தில் பாலாஜியை வாழ்த்திய தினகரன்

டிடிவி.தினகரன் ஆதரவாளராக இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் தன்னை திமுக கட்சியில் இணைத்து கொண்டார்.
 
இதன் பின்னர் செந்தில் பாலாஜி, தொண்டர்களை அரவணைத்து செல்பவரே உண்மையான அரசியல் தலைவர். அந்த வகையில் மு.க.ஸ்டாலின் உண்மையான தலைவர். அவரை நான் சிறந்த தலைவராக பார்க்கிறேன். அவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பால்தான் தி.மு.கவில் இணைந்தேன் என தெரிவித்திருந்தார். 
 
இது குறித்து தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, 2006ல் இருந்து செந்தில் பாலாஜியை எனக்கு தெரியும். எங்கள் உறவு நன்றாகத்தான் இருந்தது. 4 மாதம் முன் வரை நன்றாக பேசினார். திடீர் என்று சொந்த பிரச்சனை, சில நாள் ஆக்ட்டீவாக இருக்க மாட்டேன் என்றார். நானும் சரி என்று கூறி அனுப்பி வைத்தேன்.
 
அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அவர் எங்களிடம் பேசுவதை குறைத்து கொண்டார். இப்போது திமுகவில் இணைந்துவிட்டார். அவர் போனதில் வருத்தம் இல்லை. செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான். யாரையும் கட்சியில் இழுத்து வைக்க முடியாது. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என தெரிவித்தார்.