1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Salary of Rs. 48 thousand per month! Degree is enough..! Amazing employment opportunity in SBI Bank!

மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம்! டிகிரி போதும்..! SBI வங்கியில் அசத்தலான வேலைவாய்ப்பு!

SBI Jobs

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பாங்கு (SBI - State Bank of India)-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, பாரத ஸ்டேட் பாங்கில் 541 புரொபஷனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 21-30 வயதிற்குள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்று மூன்று கட்ட தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள், பணி நியமனம் பெறுபவர்கள் மாதம் ரூ.48,480 - ரூ.85,920 வரை சம்பளமாக பெற முடியும்.

 

இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாக்குமரி, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

 

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14ம் தேதி வரை கடைசி அவகாசம் உள்ளது. மேலும் விவரங்களுக்கு SBI Website ஐ காணவும்.

 

Edit by Prasanth.K

About Writer
Prasanth K
அடுத்த கட்டுரையில்
நடாஷாவை நாயை போல தூக்கி எறிய வேண்டும்! பெண் ரிப்போர்ட்டரை சாடிய ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?