ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி: பட்டாசுகளுடன் வரவேற்பு

Last Modified வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:56 IST)
தினகரன் ஆதரவாளராக இருந்த தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான செந்தில்பாலாஜி, திமுகவில் இன்று இணையவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடிகளுடன் கூடிய சிறப்பான வரவேற்பை அளித்தனர்

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரமே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்பமான தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. எனவே செந்தில் பாலாஜியின் திமுக வருகையால் இனி அந்த பகுதியில் திமுகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


senthil balaji
இன்னும் சில நிமிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக உறுப்பினர் அட்டையை பெறவிருக்கும் செந்தில் பாலாஜி, அதன்பின் ஸ்டாலினுடன் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :