செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (14:02 IST)

இருளை அகற்றி ஒளியை கொடுத்த உதய சூரியன்: செந்தில் பாலாஜி

டிடிவி தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய செந்தில் பாலாஜி நீண்ட காலம் கழித்து திமுகவில் இணைந்துள்ளார். இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு தன் தொண்டர்களின் ஆரவாரத்துடன் சென்ற அவருக்கு திமுக தலைவர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
பின் திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.பின் ஸ்டாலின் அவருக்கு சால்வை போர்த்தி கட்சி உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்.
 
பின் அண்ணா அறிவாலயத்தில் சூழ்ந்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:
அப்போது அவர் கூறியதாவது:
 
’நான் முன்பு இருந்த கட்சியின் தலைமை மற்றும் தலைவர்களை பற்றி பேச முடியாது. டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் கூறிய கருத்துக்கு பதில் கூற முடியாது.

கரூர் மக்கள் விருப்பப்படி நான் திமுகவில் இணைந்துள்ளேன். அதற்கு அனைத்து தொண்டர்களும் உறுதுணையாக இருப்பார்கள். 
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டாம், தேர்தலை சந்திப்போம் என   நான் தான் முதலில் தினகரனிடம் கூறினேன்.
 
தொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவர். அந்த ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. தமிழக மக்கள் ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க தயாராகி விட்டார்கள்.
 
அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் .இந்த ஆட்சி கவிழ்ந்ததும் இபிஎஸ் விவசாயத்திற்கு சென்று விடுவார். அதிமுக,அமமுக வில் உள்ள முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைய இருக்கிறார்கள்.
 
தமிழகத்தில் உள்ள 3 கோடி இளைஞர்களின் விருப்பம் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதுதான்.மேலும் 17 தகுதிநீக்க எம்எல் ஏக்களை திமுகவுக்கு நான் அழைக்கவில்லை அது அவர்கள் விருப்பம்.
 
அன்பிற்குரிய தலைவர் தளபதி அவர்களின் தலைமையின் கிழ் பணியாற்ற கரூர் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளோம்.
 
இவ்வளவுநாள் மனதில் இருந்த இருளை அகற்றி ஒளியை கொடுத்துள்ளது உதய சூரியன். ‘ இவ்வாறு கூறினார்