திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (12:27 IST)

ஹை வோல்டேஜ் தினகரன்; 230 வோல்ட் அதிமுக – ஜெயக்குமார் பொன்மொழி !

அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செந்தில் பாலாஜி, டிடிவி தினகரன் குறித்து பேசியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவின் சார்பாக பத்திரிக்கையாளர்களை அதிகமாக சந்தித்து வருவபர் அமைச்சர் ஜெயக்குமார். அந்த கட்சியில் யார் எது கூறினாலும் அதற்கு விளக்கம் அளிப்பதற்கோ அல்லது எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கோ அதிமுக சார்பில் அதிமுக சார்பில் ஆஜராவது ஜெயக்குமார்தான். கிட்டத்தட்ட அதிமுகவின் பி.ஆர்.ஓ. ஆகவே மாறியிருக்கிறார் ஜெயக்குமார்.

சமீபத்தில் பெண் ஒருவரோடு தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் சிறிது காலம் ஊடகங்களை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது மீண்டும் பழையபடி ஊடகங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த வாரத்தின் ஹாட் டாபிக்கான 5 மாநிலத் தேர்தல் முடிவுகள், செந்தில பாலாஜி திமுக இணைப்புக் குறித்து தனது கருத்துகளைக் கூறியுள்ளார். அதில் செந்தில் பாலாஜியின் திமுக இணைப்பு குறித்து கேட்கப்பட்ட போது’ செந்தில் பாலாஜி திமுக மீது உள்ள பழைய பாசத்தினாலே அங்கு போகிறார். அது கடலில் கரைத்த பெருங்காயம் போல வீண்தான்’ எனக் கூறியிருக்கிறார்.

மேலும் தினகரன்  அமமுக-வை சீண்டுவது உயர் அழுத்த மின்சாரத்தை சீண்டுவது போன்றது எனக் கூறியிருந்த கருத்துக்குப் பதிலளித்த ஜெயக்குமார் ‘ அதிமுக சீராக இயங்கும் 230 வோல்ட், டிடிவி யாருக்கும் பயன்படாத ஹை வோல்ட். மேலும் தினகரன் தானே அவர் பயங்கரமானவர் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்’. என கூறியிருக்கிறார்.