ஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி பேட்டி

Last Modified வெள்ளி, 14 டிசம்பர் 2018 (13:28 IST)
தினகரன் ஆதரவாளராக இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் தன்னை திமுக கட்சியில் இணைத்து கொண்டார்.

திமுகவில் இணைந்தப்பின் செய்தியாளர்களுக்கு செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தொண்டர்களை அரவணைத்து செல்பவரே உண்மையான அரசியல் தலைவர்; அந்த வகையில் மு.க.ஸ்டாலின் உண்மையான தலைவர். மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன், அவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தி.மு.கவில் இணைந்தேன்


இருளை அகற்றி ஒளி தரும் சூரியன், என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய ஒளி தந்திருக்கிறார்கள். நான் இருந்த இயக்கத்தின் தலைமையும், என்னுடன் பணியாற்றியவர்களும் ஆதங்கத்தில் விமர்சித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக அமமுகவின், எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்கவில்லை

இவ்வாறு செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :