ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 மே 2019 (10:09 IST)

மோடி என்ன மோடி? மோடியோட டாடி வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது... டிடிவி தடாலடி!!

டிடிவி தினகரன் பிரச்சாரத்தின் போது மோடியோட டாடி வந்தாலும் அதிமுக அரசை காப்பாற்ற முடியாது என தடாலடியாக பேடியுள்ளார். 
 
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் 19 ஆம் தேதி திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்தார் தினகரன். 
 
அந்த வகையில் திருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்த போது அதிரடியாக பேசினார். அவர் பேசியது பின்வருமாறு... 
 
தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மக்களைப்பற்றி சிந்திக்கவே இல்லை. 
அதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர். அதனால்தான் நடந்து முடிந்த தேர்தலில் அமமுகவிற்கு வாக்களித்தனர். அதேபோல் இப்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் மக்கள் அமமுகவிற்கே வாக்களிக்க உள்ளனர்.  
 
எங்களுக்கு சிறை கம்பி சின்னத்தை வழங்க வேண்டும் என்று கூறிய தமிழிசைக்கு கிருஷ்ணர் எங்கு பிறந்தார் என தெரியுமா? எங்களுக்கு சிறை கம்பியை சின்னமாக கொடுத்தாலும் வெற்றி பெறுவோம். 
 
மே. 23 ஆம் தேதிக்கு பின்னர் மோடியோட டாடி வந்தாலும் அதிமுக அரசை காப்பாற்ற முடியாது. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள் அனைவரும் அமமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.