திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (18:52 IST)

கீர்த்தி சுரேஷ் பாஜகவில் சேர்ந்தாரா ? இதுகுறித்து அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில்  இணைந்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அவரது தயார் மேனகா சுரேஷ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
மேனகா சுரேஷ் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.  இதனையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்துவிட்டதாக தகவல் பரவியது. 
 
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேனகா கூறியதாவது :
 
எனது கணவர் சுரேஷ் பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார்.  ஆனால் நானும், மகள் கீர்த்தி சுரேஷும் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. ஆனால் கணவர் பாஜக என்பதால் அக்கட்சிக்கு ஆதரவாக டெல்லியில் பிரசாரம் செய்ததாகவும், பின்னர் பிரதமர் மோடியைச் சந்தித்ததாகவும் கூறினார்.
 
மேலும் கீர்த்தி சுரேஷுக்கு எந்தக் கட்சியிலுல் சேர ஆர்வமில்லை: அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை என்று தெரிவித்தார்.