செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (20:19 IST)

செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு எதிராக பெண் பரபரப்பு புகார்...

ரூ 25 கோடி மதிப்பிலான சொத்திற்காக என் மகனை கடத்தியதோடு, தற்போது வழக்கு விசாரணைக்கு வருவதினால் என்னையும் என் உறவினர்களையும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியும் மிரட்டுவதாக தாய் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். தனது மகனை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பியும் மற்றும் அவரது அடியாட்களும் தான் கடத்தி சென்று இருப்பார்கள் அவர்களை மீட்டு தரவேண்டும்  மகனின் தாயார் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி தெய்வானை வயது 62. இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் கோகுல் என்ற ஆண் பிள்ளை சிறுவயதிலே தத்து எடுத்து வளர்த்து வந்தனர். 
 
ராமலிங்கம் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு விவசாய தோட்டம் காலியிடம் என 25 கோடிக்கும் மேலாக சொத்து உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது அடியாட்கள் கோகுலை கடத்தி சென்று, அவர்களது குடும்ப சொத்தை எழுதி வாங்கியதாக அப்போது புகார் எழுந்தது.
 
இது தொடர்பாக கரூர் குற்றவியல் நீதிமன்றம் என் ஒன்றில் வழக்கு தொடக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது கோகுல் வாக்குமூலம் அளித்தால் அது செந்தில்பாலாஜிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிகிறது. கோகுல் கடந்த சில வருடங்களாக கோவையில் தங்கி பணியாற்றி வருகிறார் அவரது மனைவி மகனும் அங்கேயே உடன் உள்ளன. 
 
இதனிடையே தனது தாயாரைப் பார்க்க கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி கரூருக்கு வந்து விட்டு சென்றவர் அதன்பின் மாயமாகி விட்டார். இதுதொடர்பாக கரூரில் உள்ள வெங்கமேடு காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என தெய்வானை புகார் அளித்தார். இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த ஆறாம் தேதி ஆட்கொணர்வு மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 
வழக்கு விசாரணையின்போது தனக்கு எதிராக சாட்சியமளித்தால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி செந்தில் பாலாஜியும் அவரது அடியாட்களும் தான் தனது மகனை கடத்தி வைத்திருக்கக்கூடும். எனவே எனது மகனையும் எனது சொத்தையும் மீட்டுத்தர வேண்டும் தமிழக அரசு என கண்ணீர் மல்க அவரது வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெய்வானை தெரிவித்தார். 
 
ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சரின் உறவினர் கொங்கு மெஸ் சுப்பிரமணி என்பவர் குட்ஹா வழக்கில் சிக்கிய நிலையில் போலீஸீக்கும், நீதிமன்றத்திற்கும் டாட்டா காட்டி வந்த நிலையில் குட்ஹா செந்தில் பாலாஜி என்ற பெயர் எடுத்த நிலையில் தற்போது ஆட்கடத்தல் வழக்கு மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்கிலும் சிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள். ஏற்கனவே அ.தி.மு.க கட்சியில் இருந்ததால் தான் அமைதியாக இருந்ததாகவும், தற்போது தி.மு.க கட்சிக்கு வந்திருக்கின்றோம் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம் என்று ஆங்காங்கே மிரட்டி வருகின்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.