முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் இருந்தால் கூட்டணிக்கு வர மாட்டோம்: டிடிவி தினகரன்
அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை, தங்களது கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தினகரன், "இந்த முறை அ.ம.மு.க. வெற்றி முத்திரை பதிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், "நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, நிச்சயமாக ஆட்சி அமைக்கும். அதற்கான வெற்றி பொருள் மே மாதம் உங்களுக்குத் தெரியும்" என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் மற்றும் செங்கோட்டையனின் காலக்கெடு குறித்த கேள்விகளுக்கு, "அது அவர்களது தனிப்பட்ட விவகாரம்" என்று பதிலளித்து, எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Edited by Mahendran