செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (15:57 IST)

விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் - மின்வாரியம் அறிவிப்பு

நடப்பாண்டில் சுமார் 50 ஆயிரம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவிய கொரொனா வைரஸால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தனர்.

இந்த நிலையில் விவசாயம் மட்டுமே சரிவைச் சந்திக்காமல் உள்ளதாகத் தகவகல்கள் வெளியானதுடன் பலரும் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு  இலவச மின்சாரம்  வழங்கப்படுமென மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும். இதற்கான தட்கல் திட்டத்தில் பங்கேற்க வரும் 21ம் தேதி முதல் 31.10.2020 வரை, விண்ணப்ப தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக   மின் வாரியம் தெரிவித்துள்ளது.