புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (14:50 IST)

இந்தி திணிப்புதான் பிடிக்காது.. மத்தபடி இந்தி ஓகேதான்! – ரூட்டை மாற்றிய ஸ்டாலின்!

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக போராடி வரும் நிலையில் மொழி திணிப்புக்கு எதிராக போராடுகிறோமே தவிர பிற மொழிகளை வெறுப்பதில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள மு.க.ஸ்டாலின் “திமுக இந்தி திணிப்பை எதிர்க்கிறதே தவிர இந்தி என்ற மொழியை அல்ல.. மத அடிப்படைவாதத்திற்குதான் எதிரிகளே தவிர மதங்களுக்கு அல்ல.. தமிழ்நாட்டு உரிமைகளுக்காக போராடுபவர்களே தவிர பிரிவினைகளை ஏற்படுத்துபவர்கள் அல்ல” என கூறியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.