தொடர்புடைய செய்திகள்
- டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு திடீரென திரும்பப் பெறப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்..!
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு..நீதிபதி அல்லி உத்தரவு
- ஏ.ஆர்.ரகுமான் மீது புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்.. என்ன காரணம்?
- சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: அக்டோபர் 5ஆம் தேதி வரை சிறை..!
- சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் -நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் TTF வாசனின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு.. மேலும் 15 நாட்கள் என உத்தரவு..!
கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரபல யூடியூபர் TTF வாசன், ஆபத்தான முறையில் பைக் ஓட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இரண்டு முறை அவருடைய ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்
இந்த நிலையில் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் TTF வாசனின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் TTF வாசன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
