ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:50 IST)

சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் -நீதிமன்றம் உத்தரவு

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுக்க காவல் துறையினர் மனு அளித்திருக்கும் நிலையில் இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த சில நாட்களாக விசாரணை செய்தது.

இந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திறன்மேம்பாட்டு நிறுவனம் முறைகேடு வழக்கில் சந்திரபாபு  நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,  ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு  2 நாள் போலீஸ் காவல் வழங்கி  உத்தரவிட்டுள்ளது.