வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (13:14 IST)

வார்னிங் கொடுத்தும் தொடர்ந்த உல்லாச உறவு: விபரீத முடிவெடுத்த கணவன்!

திருச்சியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த ரவுடியை தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் ஒரு பெரிய ரவுடி. இவன் மீது பல வழக்குகள் உள்ளது. அதில் கொலை வழக்குகளும் அடக்கம். திருமணமாகு குழைந்தைகள் உள்ள இவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. 
 
இந்த கள்ளத்தொடர்பு அந்த பெண்ணின் கணவனுக்கு தெரியவர ஆனந்தனை எச்சரித்துள்ளார். ஆனால், ஆனந்தன் அடங்குவதாய் இல்லை,. அந்த பெண்ணுடனான கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். 
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவன், ஆனந்தன் கடைவீதி பகுதியில் உள்ள ஒரு விறகு கடையில் தூங்கிக்கொண்டிருந்த போது தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். 
 
சம்பவம் அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்த நபரை கைது செய்தனர்.