வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (13:08 IST)

குடிப்பதற்காகவே டாஸ்மாக் கடைகளில் கொல்லை… காவலாளி கொல்லை – அதிரவைக்கும் சம்பவம் !

திருச்சி அருகே டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்கும் போது பார்த்துவிட்ட காவலாளியை இளைஞர்கள் மூன்று பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ளது பூவாளூர் கிராமத்தின் அருகே ராஜா என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்த பாலையா கடந்த 20-ம் தேதி காலை, உடலில் பல இடங்களில் காயஙகளோடு இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலிஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடலில் ஈடுபட்டனர்.

சிறுகனூர் அடுத்துள்ள நெடுங்குழு கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார், சௌந்தரராஜன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு ஆகியோரைப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளன

இதற்கு முன்னர் இதுபோல டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்து குடித்து வந்ததாகவும் சம்பவம் நடந்த அன்று அந்த டாஸ்மாக்கில் கொள்ளையடிக்கும் போது காவலாளி எழுந்துவிட்டதால் அவரை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட இளைஞர்கள் மூன்று பேருமே 21 வயதிற்குக் குறைவானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்கள். இவர்களைப் போல இன்னும் எத்தனைப் பேரை இந்த டாஸ்மாக் கடைகள் காவு  வாங்கப்போகிறதோ ?