வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (20:05 IST)

10 ஆண்டுகளில் 1459 கள்ளக்காதல் கொலைகள்: காவல்துறை அறிக்கை

தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள் நடந்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 
 
10 ஆண்டுகள் என்றால் 3650 நாட்கள். 3650 நாட்களில் 1459 கொலைகள் என்றால் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு ஒரு கள்ளக்காதல் கொலை தமிழகத்தில் மட்டும் நடந்துள்ளது என்பது இந்த அறிக்கை தரும் ஒரு அதிர்ச்சி தகவல் ஆகும்
 
பெரும்பாலான கள்ளக்காதலுக்கு காரணமாக ஒருசில தொலைக்காட்சி தொடர்கள், ஒருசில சினிமாக்கள் மற்றும் இண்டர்நெட் ஆகியவையே கருதப்படுகிறது. மேலும் தனிமனித ஒழுக்கம் என்பது கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை தெளிவாக குறிப்பிடுகிறது
 
மேலும் கள்ளக்காதலுக்காக பெற்ற தாயே குழந்தைகளை கொலை செய்யும் கொடுமையும் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் தெய்வமாக மதிக்கப்படும் தாய்மார்களே குழந்தைகளை கொலை செய்கின்றனர் என்றால் நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதும் கவலைக்குரியதாக உள்ளது.