1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:42 IST)

மநீம வேட்பாளரின் நண்பர் வீட்டில் ஐ.டி ரெய்டு!? – ரூ.10 கோடி சிக்கியது!

திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவரின் வீட்டில் ரூ.10 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் மொராய்ஸ் சிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் லெரோன் மொராய்ஸ். இவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்திய நிலையில் ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மொராய்ஸ் திருச்சி மநீம வேட்பாளர் வீர சக்தியின் நண்பர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மநீம பொருளாளரின் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.11.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.