வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:02 IST)

எனக்கு ஓட்டு போடுங்க.. பிச்சை எடுத்தாவது காப்பாத்துவேன்! – சீமான் பிரச்சாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தனி தேர்வு கொண்டு வருவதாக பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் எண்ணூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் “சின்னஞ்சிறார்களுக்கு ஆயிரத்தெட்டு தேர்வு வைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவோ, அமைச்சராகவோ ஆவதற்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் முடியும் என சட்டம் கொண்டு வருவேன்” என பேசியுள்ளார்.

மேலும், பிரச்சாரத்தில் பேசிய அவர் தான் வென்றால் மக்களின் தேவையை பிச்சை எடுத்தாவது நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.