வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (15:49 IST)

திருச்சி போலிஸாருக்கு இன்னும் சம்பளம் வரவில்லை… பின்னணி என்ன?

திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட 1800 பேருக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இன்னும் சம்பளம் கணக்கில் ஏறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாநகரக் காவலுக்கு உட்பட்ட சரகத்தில்ஆணையர், துணை ஆணையர் இருவர், அலுவலகப் பணியாளர்கள் 70 பேர் உட்பட 1,850 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கான ஆகஸ்ட் மாத சம்பளம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியே வங்கிக் கணக்கில் ஏறி இருக்கவேண்டும். ஆனால் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலும் ஏறவில்லை என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விசாரிக்கையில் சமீபத்தில் காவல்துறையினருக்கு இணையம் மூலமாக சம்பளம் அனுப்ப விப்ரோ நிறுவனத்தின் ஒரு மென்பொருளை வாங்கியதாக சொல்லப்படுகிறது. அந்த மென்பொருள் மந்தமாக இருப்பதாகவும், அதனால் சம்பளம் ஏறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.