செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:54 IST)

பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு மாற்றம்....எங்கு, எப்போது ? முக்கிய அப்டேட்

படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் வரிசையாக படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது.

எனவே  கார்த்தியின் சுல்தான் திரைப்படமும் தொடங்கப்பட இருந்தது. ஆனால் மணிரத்னம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு முதலில் பொன்னியின் செல்வனை முடித்துவிட்டு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மணிரத்னம் ஒரு குழுவை அனுப்பி சிலோனில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய அனுப்பியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் கலை இயக்குனர் தோட்டாதரணி கைவண்ணத்தில் சென்னையில் சில ஸ்டுடியோக்களில் செட் அமைக்கும் பணிகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே கொரொனா  காரணமாக தடைப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இப்படத்தி விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயக் ரவி, ஐஸ்வர்யாராய்,. திரிஷா, ஐஸ்வ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பிரபலங்களின் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.

 இதையடுத்து,  இப்படக்குழு வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி இலங்கை செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.