வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:40 IST)

ஆதிபுருஷ் படத்தில் சாயிப் அலிகானுக்கு சம்பளம் இவவளவா? வியக்கவைக்கும் தகவல்!

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடிக்க சாயிப் அலிகானுக்கு மிகப்பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் இதுவரை வாங்காத அளவுக்கு சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. அதாவது அவரது சம்பளமே 40 முதல் 50 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் பட்ஜெட் இன்னும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது.