1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (08:56 IST)

கரையைக் கடந்த மாண்டஸ் புயல்… சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிவு!

மாண்டஸ் புயல் நேற்றிரவு கரையைக் கடந்த நிலையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் நேறிரவு இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணியளவில் கரையைக் கடந்தது.

இதனால் வீசிய அதிவேகக் காற்றால், சென்னையில் பல இடங்களில் பிரம்மாண்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.