1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:21 IST)

முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து சங்கங்களும் பங்கேற்கின்றன

காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து சங்கங்களும் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன. 
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
 
இதனையடுத்து இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 15 போக்குவரத்து சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளன.