போராட்டம் நடத்தினால் சம்பளம் பிடித்தம்..! – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!
மார்ச் 28, 29 தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.
ஆனால் இந்த போராட்டத்திற்கு போக்குவரத்துத்துறை அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து தொழிலாளர்களை எச்சரித்துள்ள போக்குவரத்துத்துறை 28 மற்றும் 29ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது என்றும், அன்றைய தினம் போராட்டம் நடத்துபவர்கள், விடுப்பு எடுப்பவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.