1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (09:49 IST)

நகைக்கடன் தள்ளுபடி செய்யல..! – கூட்டுறவு சங்கத்தை பூட்டிய மக்கள்!

கூட்டுறவு சங்கத்தில் பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என கூறி மக்கள் கூட்டுறவு சங்கத்தை பூட்டியது கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் மக்கள் பலரும் நகைக்கடன் பெற்றுள்ள நிலையில் 5 பவுனுக்குள் நகை கடன் பெற்றவர்கள் கடனை தள்ளுபடி செய்வதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கோவில்பட்டி அருகே வில்லிப்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் 900க்கும் மேற்பட்டோர் நகைக்கடன் பெற்றுள்ள நிலையில் அவர்களில் 343 பேருடைய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையில் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் கடன் தள்ளுபடி கிடைக்காத மற்றவர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கூட்டுறவு சங்க கதவையும் மூடி பூட்டியுள்ளனர். பின்னர் அங்கு விரைந்த போலீசார் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் திறந்ததோடு மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.