செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஆனந்தகுமார்
Last Updated : சனி, 26 டிசம்பர் 2020 (23:38 IST)

தொழில்முனைவோருக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி

கரூர் மாவட்ட அளவில் வரும் 30 ம் தேதி தொழில்முனைவோருக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி.
 
கரூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் சங்கம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் நிறுவனம் மற்றும் TFSC இணைந்து நடத்தும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பொருட்கள் விற்பனை மற்றும் சேவை வரி பயிற்சி கருத்தரங்கு வரும் புதன்  கிழமை அன்று 30-12-2020 ஜவஹர் பஜாரில் உள்ள ஹோட்டல் ஆரியாஸ் முதல்தளத்தில் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறுகின்றது. இந்த கருத்தரங்கில்  விற்பனை வரி ஆலோசகர் ஸ்ரீ நிவாசா அண்ட் கோ பிரசன்ன வெங்கடேஷன் மற்றும் ஸ்ரீ சாய் அசோசியேட்ஸ் ஆர்.துரைமுருகன் ஆகியோர் பயிற்சி வழங்குகிறார்கள். மேலும்  முதலில் வரும் 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் முன்பதிவு மிகவும் முக்கியம் என்றும், 29 ம் தேதி மதியத்திற்குள் கீழ் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கரூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜெ.கதிர்வேலன் மற்றும் செயலாளர் ஜெ.டெக்ஸ் டாக்டர் ஆர்.சிவக்குமார் ஆகியோர் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய செல் பேசி எண்கள் 9994386104, 9443839900 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.