அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவ, மாணவிகள் வேதனை ?

karur
Last Modified சனி, 21 நவம்பர் 2020 (23:43 IST)

அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவ, மாணவிகள் வேதனை ?
இதையெல்லாம் இனி அந்த கல்லூரியில் நடக்க கூடாது லிஸ்ட் போட்டு வேதனையை பகிர்ந்த முன்னாள் மாணவ, மாணவிகள்...

கரூர் அரசு கலைக்கல்லூரியானது தன்னாட்சி அந்தஸ்து பெற்று இயங்கி 4800 மாணவர்களுடன் இயங்கி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தென்னிந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த அரசு கலைக்கல்லூரியானது பல்வேறு துறை ரீதியான வரலாற்று சாதனையாளர்களை உருவாக்கி இருப்பது அனைவரும் அறிந்ததே., இந்த கல்லூரியில் படித்த முன்னாள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூறும் போது., எங்களிடம் கல்லூரியில் ஆராய்ச்சித்துறை மாணவர்களிடம்
சி.ஆர்.சி க்கு பணம் பெறப்படுகின்றது. இந்த பணத்தில் கல்லூரி நிர்வாகம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தேவையான ஜெராக்ஸ், பிரிண்ட் அவுட் போன்றவற்றினை எடுத்து தந்து கல்லூரி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும், ஆனால் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் அது போல எந்த சம்பவமும் நடைபெறாத சமயத்தில், மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் கேள்விக்கேட்க துவங்கியுள்ளனர். பின்னர் ஏன், எங்களிடம் பணம் வாங்குகின்றீர்கள் என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது., இதுமட்டுமில்லாமல், கணினி அறிவியல் துறையில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு, படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு டி.ஆர்.சி (department research committee) இவர்களுக்கு புரோக்கிராம் முடிந்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து தரவேண்டும், ஆனால் அந்த துறையின் தலைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து தருவதில்லை, பிறகு மாணவர்கள் லேபில் பாடம் கற்கும் போது அவர்களுக்கு இண்டர்நெட் இருந்தும், அவர்களுக்கு இண்டர்நெட் கனெக்‌ஷன் தருவதில்லை என்று தற்போதுள்ள மாணவர்கள்
குமரிக்கொண்டுள்ளனர்.

கல்லூரியில் பேராசிரியர்கள் சிலர் மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்துவதும் இல்லை, வகுப்பிற்கும் வருவது கிடையாது. யு.ஜி.சி விதிப்படி ஒவ்வொரு செமஸ்டர் 90 நாட்கள் நடைபெற வேண்டும், இது கொரோனா காலத்திற்கு முன்பே இந்நிலை, தற்போது தான் ஆன்லைன் வகுப்புகள்.

அப்போதே அப்படி என்றால் ஆன்லைன் வகுப்புகளில் எப்படி இருக்கும் என்கின்றார் முன்னாள் மாணவர் ஒருவர், சில பேராசிரியர்கள் ஒழுங்காக வகுப்பிற்கு வந்து சரியாக பாடத்தினை நட்த்தி இருந்தால் எங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்கின்ற அவசியம் கிடையாது என்கின்றார் முன்னாள் மாணவர்கள். கொரோனாவிற்கு முன்பு கல்லூரி நாட்களில் பாடம் எடுக்காமல், ஸ்பெஷல் கிளாஸ் என்கின்ற பெயரில் செமஸ்டர் முடியும் போது எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். கணினி அறிவியல் துறை மாணவி ஒருவர் கூறும் போது, நான் தற்போது பி.எச்.டி பயின்று வருகின்றேன், எனக்கு, கோர்ஸ் ஒர்க் நடத்துவதற்கு என்னுடைய துறை தலைவர் என்னை மிகவும் அழைய விட்டார் என்றார். ஆனால் பாரதிதாசன் பல்கலைக்கழக விதிப்படி கோர்ஸ் ஒர்க் எழுதுவதற்கு கல்லூரி முதல்வரிடமோ, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியிடமோ அனுமதி வாங்கத்தேவையில்லை, இவை என்னுடைய கைடு சார்ந்த விஷயம் என்கின்றார் அந்த மாணவி

நான் (கல்லூரி மாணவி) அவரது அனுமதி தேவை இல்லை என்று தெரிந்து கொண்டு கோர்ஸ் ஒர்க் எழுதி மதிப்பெண் சான்றிதழ்களையும் பெற்று விட்டேன், இதையெல்லாம் இவர்களுக்கு தெரியாதா ? ஏன் இவர்கள் எங்களது காலத்தின் நேரத்தினையும், படிப்பின் நேரத்தினையும் வீணடிக்கின்றார்கள். இங்குள்ள சில துறைகளில் டி.சி மீட்டீங் நடைபெறும் போது வெளியில் இருந்து வரும் புறத்தேர்வாளர்கள் அவர்களுக்கு யு.ஜி.சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக விதிப்படி டி.ஏ [டெயிலி அலவன்ஸ்] கொடுக்கப்பட வேண்டும், ஆனால் சில துறைகளில் இல்லை என்று சொல்லி விட்டு, துறைத்தலைவர்களே கையெழுத்து போட்டு கொண்டு அவற்றை வைத்து கொண்டு விடுவார்கள் என்று முன்னாள் மாணவ, மாணவிகள் குற்றச்சாட்டு விடுத்துள்ளனர். முன்னாள் முதுகலை மாணவர்கள் கூறும் போது., நாங்கள் பிராஜக்ட் செய்யும் போது கல்லூரியில் சில பேராசிரியர்கள் அதற்கும் பணத்தினை பெற்றுக் கொண்டு தான் முடித்து தருகின்றார்கள். இதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும், இனியும் இது போல நடக்க கூடாது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இது போல, நடக்க கூடாது என்கின்றனர் முன்னாள் மாணவ, மாணவிகள். எம்.பில் பிராஜக்ட் முடிப்பதற்கு சில ஆயிரங்களையும். பி.எச்.டி பிராஜக்ட் முடிப்பதற்கு சில லட்சங்களையும் பெற்றுக் கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேராசிரியர்களுக்கு மட்டும் தெரிந்த மாணவ, மாணவிகளுக்கு அதிகமான practical mark போடப்படுவதாகவும், அந்த பேராசிரியர்களுக்கு பிடிக்காத மாணவ, மாணவிகளுக்கு மிக மிக குறைவாக மதிப்பெண்கள் போடப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :