1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Train Services Disrupted in November: 10 Express Trains Diverted or Delayed

தமிழக பாதையில் செல்லும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

ரயில்சேவை
தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நவம்பர் மாதத்தில் மதுரை - சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் உட்படத் தென்மாவட்டங்களில் இயக்கப்படும் 10 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
இதுகுறித்துத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின் 10 முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
 
கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் நவம்பர் 1, 6, 8, 11, 13, 15 ஆகிய தேதிகளில் திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிலையங்களைத் தவிர்த்து செல்லும்.
 
மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 1, 9, 11, 15 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மற்றும் மதுரை நிலையங்களுக்கு செல்லாது.
 
 நாகர்கோவில் - காச்சிகுடா எக்ஸ்பிரஸ் (நவ. 1, 8, 15) மற்றும் குஜராத் - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (நவ. 4, 11) ஆகியவை மாற்றுப்பாதையில் செல்வதால், இவை மதுரை மற்றும் திண்டுக்கலை தவிர்க்கும்.
 
நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி. ரயில் நவம்பர் 11 அன்று மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு, மதுரை மற்றும் திண்டுக்கல் நிலையங்களை அடையாது.
 
குருவாயூர் - சென்னை எழும்பூர் இரவு 11.15 மணி ரயில் நவம்பர் 10 அன்று மாற்றுப்பாதையில் இயக்கப்படும்போது, மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிலையங்களைத் தவிர்க்கும்.
 
பனாரஸ் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 9 அன்று மட்டும் மாற்றுப்பாதையில் செல்வதால், திண்டுக்கல் மற்றும் மதுரையில் நிற்காது.
 
மதுரை - சென்னை எழும்பூர் தேஜஸ் விரைவு எக்ஸ்பிரஸ் நவம்பர் 1, 8, 11, 15 ஆகிய தேதிகளில் அதன் வழக்கமான நேரத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும்.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம் என்ன ஆச்சு? முக்கிய உத்தரவு..!