ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 25 நவம்பர் 2021 (19:28 IST)

தூத்துக்குடி: கனமழை காரணமாக ரயில் சேவை திடீர் நிறுத்தம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அம்மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பலத்த மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வண்டி எண் 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 
தூத்துக்குடியிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16235 தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் இன்று இரவு 09.15 மணிக்கு புறப்படும்படி  நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடியிலிருந்து இரவு மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் தூத்துக்குடி சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (நவம்பர் 25/26) நடு இரவு 12.15 மணிக்கு புறப்படும்படி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று(நவ 25) மாலை 6 மணிக்கு புறப்பட இருந்த ரயில் மழை காரணமாக இரவு 8 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வண்டி எண் 06668 தூத்துக்குடி திருநெல்வேலி ரயில் இன்று ரத்து செய்ய்யப்பட்டுள்ளது.