5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டின் இதர கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் நாளை குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடியில்கனமழை பெய்யும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடலூர், அரியலூர், குமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் 3.1கி.மீ. உயரத்திற்கு நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.