சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடம்!
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அவரது உயிரை காப்பாற்ற போராடி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் வயது மூப்பின் காரணமாகவும், அவருக்கு இருக்கும் உடல்நல பிரச்சனை காரணமாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன