1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Traffic Ramasamy admitted in hospital

டிராபிக் ராமசாமி ஐசியூவில் அனுமதி: கவலைக்கிடம் என தகவல்!

டிராபிக் ராமசாமி
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
டிராபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடம் என்று கூறப்பட்டாலும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து டிராபிக் ராமசாமி விரைவில் நலம் பெற வேண்டும் என பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி குறித்த அறிவிப்பு - உயர்ந்தது பங்குச் சந்தை!