1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:21 IST)

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திருட்டு! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு செலுத்த மருத்துவமனையில் வைத்திருந்த கொரோனா தடுப்பூசிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் ஜெய்பூரில் உள்ள சாஸ்திரி நகர் அரசு மருத்துவமனையில் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிடங்கில் இருந்த தடுப்பூசிகளில் 32 சிறிய புட்டிகள் மாயமாகியுள்ளன. ஒரு புட்டிக்கு 10 டோஸ் வீதம் 320 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசியை திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் மருத்துவமனை பணியாளர்களே இதை செய்தனரா என்பது குறித்தும் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.