திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (10:29 IST)

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.,

தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் முடிந்த நிலையில், சமீபத்தில் கொரோனா ஊரடங்கு குறித்த ஆலோசனையிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது, தற்போது அவர் பூரண நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.